Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

Wednesday, December 21, 2011

ஹராத்தை ஹலாலாக்கும்.......ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!





அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது…
ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!

ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் மார்க்க வல்லுனர்களிள் சபை தொடர்பாக பல சர்ச்சைகள் சமூகத்தில் எழுந்து வருகின்றன. அண்மைக்காலமாக அது வழங்கி வரும் மார்க்கத் தீர்ப்பு ஹராத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஹராத்தை இலகுவாக்கக் கூடிய, ஹராத்தை நெருங்கக் கூடிய ஒரு சூழ்நிலையை தோற்றுவித்திருக்கிறது.

இது வழங்கும் ஹலால் பத்வா ஹராம் பற்றிய அச்சத்தை சமூகத்தில் குறைத்து வருகிறது.

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற இந்தப் பிரச்சினைப்பற்றி பேசுவதற்கு முன் சமகால உலக அரசியல் பற்றியும், அதன் பாதிப்பாய் உருவெடுத்திருக்கும் ஜம்இய்யதுல் உலமா சபையின் பத்வா வழங்கல் நிலைப்பாடு பற்றியும் தெளிவு பெறுவது அவசியமாகும்.

உலக மயமாக்கல் உலமா சபையை எப்படி மாற்றியிருக்கிறது பாதித்திருக்கிறது என்று பார்ப்பது அவசியமாகும்.

அமெரிக்கா ஏகாதிபத்தியம் அபாயகரமாக உலகமயமாக்களோடு எல்லா நாடுகளையும், எல்லா சமூகங்களையும் கலாசார, அரசியல் ரீதியாக அழித்து வருகின்றது

அமெரிக்கா பலம் பொருந்திய தனது இராணுவ கட்டமைப்பின் மூலம் தனக்கு தேவையான நாடுகளை ஆக்கிரமிக்கிறது. அறிவியலில் தன்னோடு போட்டிபோடும் நாடுகளை அது அச்சுறுத்துகின்றது.

மனிதநேயமற்ற அதன் இராணுவ ஆக்கிரமிப்பு மிகவும் பயங்கரமானது. அதன் கலாசார ரீதியிலான ஆக்கிரமிப்பு மிகவும் பலமானது. ஏனைய நாடுகள் மீதான இந்த கலாசார ஆக்கிரமிப்பு நாகரீகம் என்ற போர்வையில் புகுந்து நாசத்தை விளைவிக்கிறது. 
அது நாடுகளின் சமூக, கலாசாசார ரீதியிலான அடையாளங்களுக்கு கல்லறை சமைக்கிறது.

பூகோள ரீதியில் ஈரம் காயாத இரத்த வரலாறொன்றை அதன் ஈராணுவ கலாசார பலம் பதித்து வருகிறது.

அமெரிக்காவின் இராணுவ, மற்றும் கலாசார ரீதியிலான இரண்டு ஆக்கிரமிப்புகளும் சுரண்டல் சூறையாடல் என்ற முதலாளித்துவத்தின் தாரக மந்திரத்தில் தடம் பதித்தவையே!

அமெரிக்காவிற்கு அதிக இலாபத்தை இந்த இரண்டு ஆக்கிரமிப்புகளும் ஈட்டிக் கொடுக்கின்றன. மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளை அடிமைப்படுத்தி எண்ணெய் வளங்களை அது கொள்ளையடிக்கின்றது.

அரபு நாடுகளில் வேகமாய் பரவும் அமெரிக்க கலாசாரம் அந்த நாட்டை இஸ்லாத்தின் உயிரோட்டத்திலிருந்து துரத்தி தூரமாக்கி வருகிறது.

அமெரிக்க கலாசாரத்தின் ஆரம்ப அடையாளமே யூத தயாரிப்பான ‘‘கொக்கா கோலா”, ‘‘பெப்ஸி கோலா”. அவை அரபுகளின் அன்றாட உணவில் முக்கிய பாத்திரங்கள்.

‘‘கோலா’’க்கள் குடிக்காமல் அரபுகளின் குரல்வளைக்குக் கீழ் உணவே இறங்காது. நாசகாரர்களின் தயாரிப்போடு அரபுகளுக்கு நேசம் அதிகம்!

மேற்குலகின் கலாசாரம் முழு உலகும் பரவ வேண்டும். அசிங்கமான கலாசாரத்தில் முழு உலகையும் திணிக்கவேண்டும் ஏன்ற தந்திரத்தால் தனது கலாசாரத்தை வர்த்தக மயமாக்கி உலகை ஆக்கிரமித்து வருகிறது அந்த ஏகாதிபத்தியம்.

இன்று வாழ்க்கையின் சகல துறைகளிலும் பாதிப்பு செலுத்தும் ஒரு பயங்கரமாக அதன் ஆக்கிரமிப்பு உள்ளது. உலமா சபையின் செயற்பாடுகளுக்கும் உலகை ஆக்கிரமிக்கும் இந்த கலாசார ஆதிக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் இப்போது யோசிக்கலாம்.

இது மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் போடும் ஒரு முடிச்சா என்று கூட நீங்கள் முணுமுணுக்கலாம்.
எதிர்காலத்தை இருள்மயமாக மாற்றும் ஒரு சர்வதேச சதியை, அச்சாணியாய் வைத்து இந்த முஸ்லிம் உம்மத் சுழன்றுக்கொண்டிருக்கிறது என்பதை சொல்லி வைக்கத்தான் அப்படி ஒரு சுற்று சுற்றி வந்தேன்.
தேசம், சர்வதேசம் என்ற எல்லைகளைத் தாண்டி முழு முஸ்லிம் உம்மத்தும் அமெரிக்க சதியின் வட்டத்தை வலம் வந்துக்கொண்டிருக்கின்றது.
காட்டாறு போல வரும் கலாசார அக்கிரமிப்பை கண்மூடித்தனமாய் பின்பற்றிவரும் இந்த உம்மத்தின் நிலையும், அந்தக் கலாசாரத்திற்கு பச்சைக் கொடி காட்டி பத்வா வழங்கும் இந்த உலமா சபையின் செயற்பாடும் மோசமான எதிர்காலமொன்றுக்கான முன்னுதாரணமாகும்.
அமெரிக்கக் கலாசாரத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் உம்மத்துள் உருவாகியிருக்கும் எதிர்விளைவுகளையும் இனிபார்ப்போம்…
பெற்றோல் பாலைவன பூமியில் உற்பத்தியாகி உலகையே இயக்கி, உயிரை வழங்கிக்கொண்டிருக்கிறது . அந்த உயரிய வளத்தை மிக குறைந்த விலைக்கு அமெரிக்காவிற்கு விற்று விட்டு, அமெரிக்க தயாரிப்பான கோலாவை அதிக விலைக்கு அரபு நாடுகள் வாங்குகின்றன. 
அமெரிக்காவிற்கு விற்பனையாகும் ஒரு லீற்றர் பெற்றொலின் விலை வெறுமனே 24 (இருபத்து நான்கு) ரூபாய். அமெரிக்க தயாரிப்பான (இரசாயண தண்ணீர்க் கலவையான) ஒரு லீற்றர் கொக்கா, பெப்ஸி கோலாவை அரபு நாடுகள் நூற்று முப்பது ரூபாயை கொடுத்து வாங்குகிறது. குடித்து மகிழ்கிறது.

தன்னிடமுள்ள வளத்தின் பெறுமதியை அளவிட தெரியாத அளவிற்கு உலக மாயையில் மயங்கி மந்தப் புத்தியில் மடிந்து கிடக்கிறது இந்த அரபு சமூகம். அரபு சமூகம் அறிவியல் ரீதியாக வங்குரோத்து நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு எப்படி ஒரு நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கின்றதோ அதே போல அதன் கலாசார ஆக்கிரமிப்பு முழு உலகையும் கொள்ளையடிக்கின்றது. 
இதனை தெளிவு படுத்தத்தான் இந்த உதாரணத்தை இங்கு முன்வைத்தேன். நான் வைத்த கோலா, பெற்றோல் விலையில் சிலவேளை சின்ன மாற்றங்கள் இருக்கலாம்.
இன்று அமெரிக்க கலாசாரத்திற்கு அடிமைப்பட்ட அரபுகளை விட, ஈமானிய உணர்வுகளை பாதுகாத்து வாழ்கின்ற மக்கள் அரபு அல்லாத ஏனைய நாடுகளில்தான் அதிகம் வாழ்கின்றார்கள். 
அந்த நாடுகளை இந்த அமெரிக்க கலாசாரம் எப்படி ஆதிக்கம் செலுத்தப் போகிறது. ஆதற்கான ஒரு புதிய வழிதான் அமெரிக்க பொருட்களுக்கு ஷரீஆ அங்கீகாரம். 
அதாவது ஹலால் அங்கீகாரம். 
ஆந்த அங்கீகாரத்தைப் பெற உலமா சபைக்கு இப்போது பல லட்சம் ரூபாய்களை அள்ளி வழங்க பார்த்துக்கொண்டிருக்கின்றன பல்தேசிய நிறுவனங்கள்.
பத்வா என்ற போர்வையில் அசிங்கமான அமெரிக்க கலாசாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
உலமாசபை கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்க உணவு நிறுவனங்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பத்வா வழங்குகிறது. 
மனிதனுக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகளை உருவாக்கும் அமெரிக்க பாஸ்ட் பூட் உணவு முறை அந்த நாட்டிலேயே பல சமூகவியல் பிரச்சினைகளை தோற்றுவித் திருக்கிறது. 
(அமெரிக்க சனத்தொகையில் மூன்றில் ஒரு வீதத்தினர் அவர;களின் உணவு பழக்கங்களால் உடல் எடை அதிகரிப்பு போன்ற உடலியல் ரீதியிலான நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.)
அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் இந்த அமெரிக்க உணவு விடுதிகளை நோக்கி படையெடுப்பது அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக உலமா சபையின் ஹலால் பத்வாவை குறிப்பிடலாம். உலமா சபையின் பத்வாவை பெற்றுக்கொண்ட இந்த நிறுவனங்கள் ஊடகங்களில் உலமா சபையின் ஹலாலை முன்னிலைப்படுத்தி விளம்பரங்கள் செய்கின்றன.
முஸ்லிம்களை அமெரிக்க உணவுப் பழக்கத்திற்கு திசை திருப்ப உலமா சபையின் பத்வா(?) இன்று பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவே திட்டமிட்டு வடிவமைத்த செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக களமிறங்கிய அது இஸ்லாத்திற்கெதிராக வெளிப்படையாகவே செயலாற்றியது. 
இதனால் உலக முஸ்லிம்களின் மனங்களில் அமெரிக்க எதிர்ப்பு வளர்ந்தது.
அப்படி எழுந்த அமெரிக்க எதிர்ப்பு அலைகளும், ஆப்கானில், பலஸ்தீனில், ஈராக்கில், லெபனானில் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் கொலைகளும், அநியாயங்களும் உலகளாவிய ரீதியில் எதிர்நிலையைத் தொற்றுவித்தது.
அமெரிக்க பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றது. சர்வதேச ரீதியாக முஸ்லிம் அறிஞர்கள் அமெரிக்க, இஸ்ரேலிய பொருட்களை பாவிப்பது ஹராம் என்று கூட பத்வா வெளியிட்டார்கள். 
அதனால் அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இலங்கையில் கூட அமெரிக்க, இஸ்ரேலிய பொருட்கள் பகிஷ்கரிக்கப்பட்டன. இன்றும் பகிஷ்கரிக்கப்படுகின்றன.

அமெரிக்க பொருட்களுக்கு சந்தையில் ஏற்பட்ட பின்னடைவை சரி செய்யவே ஹலால் பத்வா சூழ்ச்சி சந்திக்கு வந்தது. 
இலங்கையில் ஜம்இய்யதுல் உலமா சபை இதனை ஒழுங்காக நிறைவேற்றும் ஊழியனுக்குரிய கதாபாத்திரத்தைப் பெற்றும் கொண்டது.
அமெரிக்க பொருளாதாரத்தோடு உயிராக இருக்கும் வட்டி தொடர்பான முஸ்லிம்களுக்குள்ள முரண்பாட்டை முடக்க வேண்டிய தேவையை உணர்ந்த இந்த இஸ்லாத்தின் எதிர்சக்திகள், போலி இஸ்லாமிய வங்கிகளின் உருவாக்கத்திற்கு முஸ்லிம்களை உட்சாகப்படுத்த சதித் திட்டம் போட்டன. 
இந்த சதியின் செயல் வடிவத்திற்கு உயிரூட்டியது உலமா சபை.

வட்டியை விட்டு தூரமாகியிருந்த முஸ்லிம்களை வேட்டையாட அதே வட்டி நிறுவனங்கள் ஒரு புதிய திட்டம் வகுத்தன. உலமா சபையின் ஹலால் பத்வா, இஸ்லாமிய வங்கி என்ற ஒரு புதிய சொல்லை அறிமுகம் செய்தது. வட்டியில் வாழ்ந்த வங்கிகள் திடீரென்று ஹலால் வங்கிகளை குட்டிகளாய் இட்டன. 
காலகாலமாய் வட்டியில் குட்டி போட்ட இந்த வங்கிகள் இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் போட்ட புதிய குட்டிக்கு உலமா சபையே “இஸ்லாமிய ஹலால் வங்கி ” என்று பெயர் சூட்டியது. பத்வாவின் மூலம் அங்கீகாரம் வழங்கியது.
ஏகாதிபத்தியத்தின் தேவைக்காக ஹராத்தை ஹலாலாக மாற்றும் இந்த வேலைத்திட்டம்; முஸ்லிம்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது.

சிலிங்கோ புரொபிட் செயாரிங் என்ற நிதி நிறுவனத்திற்கு உலமா சபை ஹலால் பத்வாவை வழங்கியது. உலமா சபையின் பத்வாவை நம்பி பணத்தை வைப்பிலிட்ட பதினாறாயிரம் முஸ்லிம்களின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. 
முஸ்லிம்களின் பணம் 1400 கோடி ரூபாய்களை இந்த நிதிநிறுவனம் மோசடி செய்துள்ளது. இவர்கள் பணத்தை இழந்து இன்று நிர்க்கதியற்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். உலமா சபையின் கண்மூடித்தனமான பத்வா முஸ்லிம்களை கஷ்டத்தில் வீழ்த்தியிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் இந்த இஸ்லாமிய(?) வங்கியில் பல ஆயிரம் ரூபாய்களை “ஆலோசனை வழங்குகிறோம்” என்ற போர்வையில் ஆலோசகர;களாக சேவையாற்றிய உலமா சபை அங்கத்தவர்கள் மாதாந்த ஊதியமாக பெற்றிருக்கின்றார்கள். உலமா சபை அங்கத்தவர்கள் பலர் அந்த வங்கியிடமிருந்து பல லட்சம் ரூபாய்களைக் கடனாக பெற்றும் இருக்கின்றார்கள். பெற்ற கடனை இன்று வரை அடைக்காமல் இருப்பதாக அந்த நிறுவனம் குற்றம் சாடடி இருக்கின்றது. இந்த செய்தி பல தேசிய பத்திரிகைகளிலும்; வெளிவந்திருக் கின்றன..

உலமா சபையின் பத்வா அங்கீகாரத்தை ஏற்றே முஸ்லிம்கள் 1400 கோடி ரூபாய்களை இந்த வங்கியில் வைப்பிலிட்டனர். இப்போது முஸ்லிம்களின் இந்த பணத்தை வங்கி ஏப்பமிட்டுவிட்டது. 
உலமா சபை அதற்கு பொறுப்பு நிற்காமல் இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்காமல் தூர நழுவி வருகின்றது. 
“நாங்கள் பத்வா வழங்கியது உண்மை. ஆனால் இப்போது நாங்கள் அந்த வங்கியிலிருந்து விலகி விட்டோம் அதற்கும் எங்களுக்கும் இப்போது எந்த தொடர்புமில்லை ” 
என்று சிறுபிள்ளைத்தனமாக சொல்கிறது இந்த உலமா சபை. அறிவீனமாக அறிக்கை விட்டு முஸ்லிம்கள் மத்தியில் அவமானப்பட்டு நிற்கின்றது.


உலமா சபையால் ஹலால் பத்வா வழங்கி ஆசிர்வதிக்கப்பட்ட சிலிங்கோ புரொபிட் செயாரிங் நிறுவனம் முஸ்லிம்களிடம் இருந்து பெற்ற பணத்தை இரவு கேளிக்கை விடுதிகளுக்கும் முதலீடு செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இஸ்லாத்திற்கு முரணான வியாபாரங்களுக்கும் முதலீடு செய்திருக்கின்றது. இதை ஜம்இய்யதுல் உலமா கண்டு கொள்ளாமல் இரந்திருக்கிறது. 
இந்த இரகசியத்தை அறிந்த பணத்தை வைப்பிலிட்ட முஸ்லிம்கள் இன்று வேதனையடைகின்றனர். அவர்கள் பணம் இழந்தது மட்டுமல்லாமல் அவர்களின் பணம் இஸ்லாம் தடை செய்த வியாபாரங்களுக்கு மூலதனமாகியிருக்கிறது.

இந்தப் பாவத்திற்கும் உலமா சபையே பதில் சொல்ல வேண்டும். 
சமூகத்தில் தலைமைத்துவம் வகித்து செய்ய வேண்டிய கடமைகள் அனேகம் உலமா சபைக்கு இருக்கின்றன. 
கல்வி, பொருளாதார ரிதியில் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றனர்.. பாடசாலை தொடர்பான, வளப்பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றன. 
அவற்றையெல்லாம் மறந்து விட்டு பணத்தை மையப்படுத்திய வங்கி, வர்த்தகம் தொடர்பான பணம் சம்பாதிக்கும் ஹலால் பத்வா செயற்திட்டங்களுக்கே அது முன்னுரிமை வழங்கியது.

அது மட்டுமல்லாமல் இந்த மோசமான கலாசார ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் கட்டுண்டு போன உலமா சபை, அமெரிக்க, யூத பல்தேசிய நிறுவனங்களுக்கும் இஸ்லாம் தடை செய்த ஹராமான இறைச்சி உணவுவகைகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் ஹலால் பத்வாவை வழங்கி பெரும் தொகையான பணத்தை பகரமாக பெற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்க, மாற்று மத வட்டி, உணவு நிறுவனங்களுக்கு பத்வா வழங்க அவசரமும், அவசியமும் உலமா சபைக்கு ஏன் ஏற்பட்டது? இந்த புதிய உணவு கலாசாரத்தை முஸ்லிம்கள் மீது திணிக்க காரணம் என்ன? முஸ்லிம்களுக்கு உண்பதற்கு இவற்றை தவிர வேறு உணவேயில்லை என்றிருந்தால் உலமா சபை உடனே முன் வந்து இந்த உணவை உண்ணுங்கள் என்று ஹலால் பத்வாவை வழங்குவதில் பிழையே இல்லை.
மேற்படி யூத, கிறிஸ்தவ கம்பனிகளிடமிருந்து பணம் அறவிட்டு பத்வா வழங்கியதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்கு மிக மோசமான வழிகாட்டலை உலமா சபை வழங்கியிருக்கிறது. 
இந்தக் குற்றச்சாட்டு உலமா சபைக்கு எதிராக சமூகத்தில் பரவலாக எழுந்தும் வருகிறது. 
கண்ட கண்ட பொருட்களுக்கெல்லாம் பணத்தை வாங்கிக்கொண்டு பத்வா வழங்கும் வியாபாரத் தனத்தில் இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இயங்கி வந்ததன் விபரீதத்தை இன்று சமூகம் நன்றாக அனுபவித்துக்கொண்டிருகின்றது.
அமெரிக்க கலாசார, அரசியல் சதி ஒன்றுக்கு உலமா சபை துணை போனதால் அவர்களுக்கல்ல மக்களுக்குத்தான் தண்டனை கிடைத்தது. 
கடந்த ரமழான் மாதம் பிஸ்ஸா உணவு நிறுவனம் ஒன்று கொக்கா கோலா பெரிய போத்தல் ஒன்றுடன் பிஸ்ஸா ஒன்றுக்கான விளம்பரத்தை செய்திருந்தது. கொக்கா கோலா போத்தலோடு உலமா சபையின் இலட்சினை பொறிக்கப்பட்ட பிரசுரத்தை கொழும்பில் வீடு வீடாக அந்த நிறுவனம் பகிர்ந்து அளித்தது. பிஸ்ஸாவிற்கு கொடுத்த ஹலால் பத்வா மறைமுகமாக கோலாவிற்கும் பயன்படுத்தப்பட்டது.

யூத சக்திகளின் கோலாவை குடிப்பதுவும், பலஸ்தீன, ஈராக்கிய முஸ்லிம்களின் இரத்தத்தைக் குடிப்பதுவும் சமமான செயல் என்பதை உலமா சபை நன்கு உணர்ந்திருக்கிறது. என்றாலும் பணத்தை மையமாக வைத்து செயற்படுவதால் அதன் சாதக, பாதகங்களை சரியாக இனம் காண முடியாமல் இப்போது திண்டாடி நிற்கிறது.

திறந்த பொருளாதாரம் பணத்திற்கு பின்னால் ஓடக்கூடிய ஒரு சமுதாயத்தை தோற்றுவித்தது உண்மைதான். 
உலமா சபை அப்படி ஓடுவதை முஸ்லிம்களால் அங்கிகரிக்க முடியாது. பணத்திற்கு முன்னால் அல்லாஹ்வின் தீனை பகடைக் காய் ஆக்க அனுமதிக்க முடியாது. பத்வாவை விற்று பணம் சம்பாதிக்க இஸ்லாத்தில் இடமே கிடையாது.

பத்வா ஒரு வியாபார பண்டமல்லவே.

அது அல்லாஹ்வின் தீன் வழங்குகின்ற ஒரு தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பை பல லட்ச ரூபாய்களுக்கு வழங்கும் அதிகாரத்தை இவர்கள் எப்படி பெற்றார்கள்?

பத்வாவை பல லட்ச ரூபாய்களுக்கு விற்க இஸ்லாம் இவர்களுக்கு அனுமதி அளிக்கின்றதா?

பணத்திற்கு விற்ற பத்வாவினால் ஏற்பட்ட விளைவு என்ன?

ஹராமான நிறுவனங்களை மேலோட்டமாக அவதானித்து பத்வா வழங்கி பணத்தை வாங்கி பெட்டியை நிறைப்பதால் யாருக்கு லாபம்?

விளைவு என்ன.....?
சுப்பர் மார்கட்களில் பன்றி இறைச்சிக்கு பக்கத்தில் கூட உலமா சபையின் பத்வா நோட்டீஸ் தொங்கிக் கொண்டிருக்கிறது.
பன்றி இறைச்சிக்கு பக்கத்தில் குந்தியிருக்கும் உலமா சபையின் ஹலால் பத்வாக்களைப் பார்த்து.... இப்போது பன்றி இறைச்சி மீதிருந்த வெறுப்பு முஸ்லிம்கள் மத்தியில் குன்றி வருகிறது.
பன்றி என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட தயங்கிய, கூச்சப்பட்ட, அருவறுப்பு பட்ட சமூகம் இன்று பன்றி இறைச்சிக்குப் பக்கத்தில் உள்ள கோழி இறைச்சியை எவ்வித சஞ்சலமும் படாமல் பிரச்சினை இல்லாமல் பலர்வாங்கிச் செல்வதை காணக் கூடியதாய் இருக்கிறது.
இந்த பாதகத்திற்கு காரணம் என்ன? பன்றி இறைச்சி விற்பனைக்கு பெயர் போன வெளிநாட்டு கம்பனிகளுக்கு உலமாசபை ஹலால் பத்வா வழங்கியதே.
ஊள்ளுர் கோழி இறைச்சி நிறுவனங்களுக்கும் பல்தேசிய நிறுவனங்களுக்கிடையில் இடையில் ஒரு போட்டியைக் கூட இது ஏற்படுத்தியது. 
முஸ்லிம்களிடம் மாத்திரம் கோழி இறைச்சி வாங்கியவர்களை பல்தேசிய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மாற்றுமத நிறுவனங்களை நாட உலமா சபை உதவி செய்தது. தேசிய ரீதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கோழி இறைச்சி வர்த்தக நிறுவனங்களுக்கு கூட இதனால் பெரிய அடி விழுந்தது. 
முஸ்லிம்களின் கடையில் இறைச்சி வாங்கி உண்டவர்களுக்கு, இல்லை இல்லை அந்நிய மத நிறுவனங்களிலும் இறைச்சி வாங்கி உண்ண முடியும் பிரச்சினையே இல்லை...என்ற ஒரு புதிய வழியை உலமா சபை காட்டிக் கொடுத்தது.
ஹராம் தொடர்பாக இறுக்கமாக இருந்த சமூகத்தின் மனநிலையை உலமா சபை இப்போது தளர்த்தியிருக்கிறது. இலகுவாக்கியிருக்கிறது.இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தேவையாய் இருந்த ஒன்றை உலமா சபை ஒழுங்காக நிறைவேற்றியிருக்கிறது.
உலமா சபை அவசரப்பட்டு ஹலால் பத்வா வழங்குவது பணத்தை அடிப்படைகாக் கொண்ட செயற்பாடு என்பதை அதன் நடவடிக்கைகள் நிரூபித்தக்கொண்டிருக்கின்றன.
சமூகத்தில் எத்தனையோ ஹராமான செயற்பாடுகள் மலிந்து கிடக்கின்றன. ஏன் அவற்றிற்கு உலமா சபையால் ஹராம் பத்வா வழங்க முடியாமல் இருக்கிறது. 
மார்க்கத் தீர்ப்பு என்ற அடிப்படையில் பார்த்தால் அவர்கள் ஹராத்தையும், ஹலாலையும் மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பாக முன்வைக்க வேண்டும்?

உலமா சபையென்றால் ஹலால் பத்வா மட்டும் தானா வழங்க முடியும்? 


ஏன் ஹராம் பத்வா வழங்க முடியாதா? 


ஹலால் ஹராம் இரண்டைப்பற்றிய கட்டளையும் சமூகத்திற்கு சொல்லத்தானே வேண்டும்?
சூதாட்டம் ஹராம் தானே? எத்தனை முஸ்லிம்கள் போதிய அறிவோ கரிசனையோ இல்லாமல் பாதை நெடுகிலும் “சுவீப் ” டிக்கட்டுகளை வாங்கி சுரண்டிக்கொண்டிருக்கின்றார்கள்? எத்தனைப் பேர் புகைபிடிக்கின்றார்கள்? எத்தனைபேர் மதுபானம் அருந்துகின்றார்கள்? 
சீதனம் பெண் இனத்திற்கே கொடுமை புரிகிறதே! சமுதாயம் மஹரை கொச்சைப்படுத்துகிறதே! ஏன் உலமா சபை இவற்றிற்கு ஒரு பத்வாவை வெளியிட்டு பள்ளிவாசல்களில் தொங்க விடக் கூடாது? 
சமூகம் எத்தனை ஹராமான விடயங்களை செய்துகொண்டிருக்கிறது? ஒரு முஸ்லிம் எத்தனை ஹராமான விடயங்களோடு பின்னிப்பிணைந்திருக்கிறான். அவற்றை உலமா சபையால் பத்வாவாக வெளியிட முடியாதிருப்பதற்கு காரணம் ஹராம் பத்வாவிற்கு பணம் வழங்க இந்த சமூகத்தில் யாருமே இல்லாமல் இருப்பதுதானே!
மற்றும் ஹலால் பத்வா போன்றல்ல ஹராம் பத்வா பல நிறுவனங்களுக்கு நஷ்டத்தை உருவாக்கும். உலமாசபைக்கு அச்சுறுத்தல்கள் வரும் அதனால்தான் உலமா சபை ஹராம் விடயத்தில் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறது
உலமா சபை ஹராமுக்கும் பத்வா வழங்கவேண்டும். 
அந்த பத்வாவிற்குரிய பணத்தை பள்ளிவாசல் பள்ளிவாசலாய் பிச்சை எடுத்தாவது கொடுக்க முஸ்லிம் சமூகம் முன்வரவேண்டும்.
.
ஹலால் தீர்ப்பிற்கு பணம் கிடைக்கிறது. ஹராம் தீர்ப்பிற்கு பணம் கிடைப்பதில்லை. ஹலால் பத்வா வியாபார, லாபம் நோக்கம் கருதி உலமா சபையிடம் வேண்டப்படுகிறது. 
ஹராம் பத்வாவை கேட்பதற்கு யாருமேயில்லை. ஹலால் பத்வாவை வைத்து உலமா சபையும் வர்த்தக நிறுவனங்களும் சேர்ந்து பணம் சம்பாதிக்கின்றன.
ஹராம் பத்வாவினால் வர்த்தக நிறுவனங்களுக்கு நஷ்டத்தைத் தவிர வேறு ஒன்றும் வந்துவிடப்போவதில்லை. இதனால் யாருக்கும் ஹராம் பத்வா தேவையே இல்லை. 
அதனால் சமுதாயத்தில் மலிந்துள்ள ஹராமான விடயங்கள் பற்றி பத்வா வெளியிட உலமா சபை முயற்சிப்பதுமில்லை. அதற்கு தேவையுமில்லை.
இவ்வளவு பிரச்சினைகளுக்குள்ளும் சமூகத்தில் தோன்றிவரும் மோசமான எதிர் விளைவு நிலையை இந்த உலமா சபை புத்திஜீவிகள்(?) புரியாமல் இருக்கின்றனர்.
அமெரிக்க, இஸ்ரேலிய பொருட்களை பாவிப்பது ஹராம் என்று பத்வா வழங்கிய யூசுப் அல் கர்ழாவி அவர்களை மதிக்கின்ற பலர் உலமா சபையில் அங்கத்துவம் பெற்றிருக்கின்றார்கள்.
உலமா சபையால் பள்ளிவாசல்களில் தொங்க விடப்பட்டுள்ள ஹலால் பிரசுரத்தில் பெண்களின் அழகுசாதனப் பொருட்களான பல வர்ண லிப்ஸ்டிக், கியூடெக்ஸ் கூட அச்சிடப்பட்டிருக்கிறது. உலமா சபையின் பார்வையில் லிப்ஸ்டிக், கியூடெகஸ் ஹலாலாக இருந்தால் உலமா சபையினர் தமது மனைவி மக்களுக்கு முதலில் அறிமுகப்படுத்த வேண்டும்.
இதன் மூலம் உலமா சபை என்ன சொல்ல வருகிறது? லிப்ஸ்டிக், கியூடெக்ஸ் படம் ஹலால் போர்வையில் ஏன் தொங்க விடப்பட வேண்டும்? இது முஸ்லிம்கள் மத்தியில் அமெரிக்க கலாசாரத்தை மறைமுகமாக திணிப்பதற்கு அந்த கலாசாரத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியாக ஏன் இதை எம்மால் கொள்ளமுடியாது?
அண்மையில் அல்கஹோல் அடங்கிய ஒரு பொருளுக்கு உலமா சபை ஹலால் பத்வாவை வழங்கியிருக்கிறது.
ஹராத்தை ஹலாலாக்கும் அமெரிக்க சதிக்கே இன்று உலமா சபை துணைபோகிறது. பணத்திற்கு அது விலைபோகிறது என்ற உண்மையை சமூகம் உணர்ந்து வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்திய சதிகளுக்கும், நாசகார சக்திகளுக்கும் உதவியளிப்போர் யாராக இருந்தாலும் அவர்களை முஸ்லிம் சமூகம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.
அல்லாஹ்வின் தீனை பாதுகாத்திட எல்லோரும் அணி திரள வேண்டும்.
அநியாயத்தைக் கண்டும் அமைதியாக, எடுத்துச் சொல்லாமல் இருப்பவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்...!

இது தவ்ஹீத் சாராத ஒருவரின் தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்  

Read more »

Tuesday, November 15, 2011

தப்லீக் ஜமா அத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர்.



மக்களை ஐந்து நேரத் தொழுகைகளுக்கு அழைக்கின்ற பணி நிச்சயமாக சிறந்த பணியாகும். இதை இன்றைய தப்லீக் இயக்கத்தினர் சிறப்பாகச் செய்கின்றனர். அதே சமயம் முஸ்லிம் என்று கூறிக் கொண்டு, மக்கள் செய்கின்ற எண்ணற்ற தீமைகளை அவர்கள் கண்டு கொள்வது கிடையாது.
கப்ர் ஜியாரத் என்ற பெயரில் மக்கள் செய்கின்ற ஷிர்க் எனும் கொடிய பாவத்தைக் கண்டு கொள்வது கிடையாது. வட்டி, வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். சுருங்கக் கூறின் நன்மைகளை மட்டும் அதிலும் குறிப்பாக தொழுகையை மட்டும் ஏவுவார்கள். எந்தவொரு தீமையையும் தடுக்க முன்வர மாட்டார்கள்.
தீமையைத் தடுப்பது சாதாரண பணியல்ல. கை கால்களைப் பதம் பார்க்கக் கூடிய, கண்ணீரையும் செந்நீரையும் வரவழைக்கும் மிகக் கடினமான பணி என்பதை, செய்து பார்த்தால் தான் தெரியும். அதனால் தான் அல்லாஹ் அழைப்புப் பணியைப் பற்றிக் குறிப்பிடும் போது, நன்மையை மட்டும் ஏவுங்கள் என்று சொல்லாமல் தீமையையும் தடுக்கச் சொல்கின்றான்.
(பார்க்க அல்குர்ஆன் 3-104, 3-114, 9-71)
அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொன்னால் யாரும் கோபப்படுவது கிடையாது. அதே சமயம் இறந்து விட்டவர்களிடம் உதவி தேடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்யும் போது தான் மக்கள் கொந்தளிக்கின்றார்கள். திட்டுவதற்கு மட்டுமல்ல, வெட்டுவதற்கும் முன் வருகின்றார்கள். எனவே தீமையைத் தடுப்பது மிகப் பெரிய பணி. இதை தப்லீக் இயக்கத்தினர் புறக்கணித்து வருகின்றார்கள். இது இவர்களிடம் உள்ள அடிப்படையான தவறாகும்.
அடுத்து இவர்களைப் பற்றிக் கூற வேண்டும் என்றால் இவர்களுடைய வேதம்(?). அது தான் இவர்களால் பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் வாசிக்கப்படும் தஃலீம் தொகுப்பாகும். இதற்கு இவர்கள் திருக்குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான் இவர்களது வேதம் என்று நாம் சொல்ல வேண்டியுள்ளது.
இவர்கள் தொழுத பிறகு தஃலீம் புத்தகத்தை வாசிக்கும் போது, “இதற்குப் பதிலாக அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படியுங்கள். அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதல் அடங்கிய ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பைப் படியுங்கள்” என்று சொன்னால் போதும். இவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும். முகம் அனல் பிழம்பாகி விடும். குர்ஆன், ஹதீஸ் எல்லாம் பாமர மக்களுக்கு விளங்காது என்று உருப்படாத பதிலை உதிர்ப்பார்கள். ஜக்கரியா மவ்லானா போன்றவர்கள் எழுதிய தஃலீம் தொகுப்பு எளிதாக மக்களுக்கு விளங்குமாம். ஆனால் அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் விளங்காதாம்.
இதையெல்லாம் பொருட்படுத்தாது நாம் குர்ஆனின் பொழி பெயர்ப்பை வாசித்து விட்டால், இனிமேல் பள்ளிவாசலில் யாரும் குர்ஆன் பொழி பெயர்ப்பை வாசிக்கக் கூடாது என்று தடை விதிப்பார்கள். இந்தக் கொடூர நிகழ்ச்சி சமீபத்தில் ஓர் ஊரில் நடந்தேறியது.
இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.
(அல் குர்ஆன் 74-49,50,51)
என்று அல்லாஹ் கூறுவது போல் இவர்களது நடைமுறை அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குர்ஆனை வாசிக்கக் கூடாது என்று சொன்னால் உடனே நாம் கொந்தளிப்போம். அதே சமயம் இந்தக் கருத்தை சமுதாயத்தில் உள்ள தப்லீக் காரர்கள் சொன்னால் அதை நாம் கண்டு கொள்ள மாட்டோம். இது என்ன நியாயம்?
இது தப்லீக் காரர்களின் அடிப்படையான மாபெரும் இரண்டாவது தவறாகும். புரிந்து கொள்வதற்கு இரண்டு உதாரணங்களைக் கூறியுள்ளோம். இன்னும் இது போன்று தவறுகள் பல அவர்களிடம் மலிந்து கிடக்கின்றன. இவர்கள் வேதமெனக் கொண்டாடும் தஃலீம் புத்தகத்தில் மலிந்து கிடக்கும் மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பட்டியல் போடுவதென்றால் இந்த இதழ் தாங்காது. எனவே இந்த தப்லீக் இயக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற நாம் பெரும்பாடு பட்டாக வேண்டும்.
இவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை விட, நபிகளாரின் பொன்மொழிகளை விட தஃலீம் புத்தகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், ‘ஃபழாயில் அஃமால்’ போன்ற நூல்களைப் பெருமளவில் அச்சிட்டு வெளியிடும் மிகப் பெரிய நிறுவனமான ‘இதாரா இன்ஷாஅத் இ தீனிய்யா’ என்ற பதிப்பகத்தின் உரிமையாளர் முஹம்மது அனஸ் என்பார் தப்லீக் இயக்கத்திலிருந்து தவ்பா செய்து தவ்ஹீதை, குர்ஆன் ஹதீஸை மட்டும் தமது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டுள்ளார். இனி இது போன்ற தஃலீம் தொகுப்புகளை அச்சிடுவதில்லை என்றும் அவற்றை விற்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளார்.
இது போல் பல சகோதரர்களும் தவ்பா செய்து உண்மையான தவ்ஹீதுடைய பாதைக்கு வர வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக. குர்ஆன், ஹதீஸைத் தனது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டது பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஏகத்துவத்தில் வெளியிடப்படுகின்றது. அதைப் பார்த்து, பலருக்கும் படிக்கக் கொடுத்து பயனடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஷிர்க்கான கருத்துக்கள் கொண்ட புத்தகங்கள் விற்பதை நிறுத்தி விட்டேன்
முஹம்மது அனஸ் அவர்களின் பேட்டி
தப்லீக் ஜமாஅத்திலிருந்து தவ்பா செய்த முஹம்மது அனஸ் அவர்களிடம் பேட்டி கண்ட போது அவர் தெரிவித்ததாவது-
மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஹனஃபி ஃபிக்ஹ் நூல்களை நான் நாடினேன். இவ்வாறு நாடுவதற்குக் காரணம், ஹனஃபி நூல்கள் தான் எங்களுக்கு மார்க்கச் சட்ட நூல்கள் என்று தெரிவிக்கப்பட்டு, அந்தச் சூழலிலேயே நாங்கள் வளர்ந்திருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்காக அந்நூல்களில் தீர்வை நாடினால் ஏதாவது ஒரு ஆலிம் அல்லது ஒரு ஷைஹ் தனது கருத்தைத் தெரிவித்திருப்பாரே தவிர குர்ஆன் ஹதீஸிலிருந்து எந்தவொரு விடையையும் நான் காணவில்லை.
அதனால் குர்ஆன் ஹதீஸிலே நான் நேரடியாகப் பார்க்க முற்பட்ட போது, ஃபிக்ஹ் நூல்களில் கூறப்பட்டிருக்கும் தீர்வுகளுக்கும் குர்ஆன் ஹதீசுக்கும் இடையில் பெரிய வேறுபாட்டைக் கண்டேன். இப்போது குர்ஆன் ஹதீஸில் முழுமையாக நான் களம் இறங்கி விட்டேன். இதனால் இப்போது என்னைச் சுற்றி இருப்பவர்களால், குறிப்பாக தேவ்பந்தி ஆலிம்களின் சிந்தனையில் வார்க்கப்பட்டவர்களால், நான் ஒரு மாபெரும் பாவத்தைச் செய்தவன் போல் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப் படுகின்றேன்.
நாம் குர்ஆன் ஹதீஸிலிருந்து விஷயங்களைத் தெரிந்தவுடன் அதைப் பின்பற்ற ஆரம்பித்தது தான் அவர்களுடைய பார்வையில் நான் செய்த மிகப் பெரும் தவறாகும். என்னுடைய உறவினர்கள் எல்லோரும் தங்களது முகத்தைத் திருப்பிக் கொண்டனர். என்னுடைய மகனுக்கு நான் நபிவழியில் திருமணம் நடத்தி வைத்த போது அதற்காக எந்தவித சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நடத்தவில்லை. என்னுடைய மகன் ஊர்வலமாக மணமகன் கோலத்தில் அழைத்து வரப்படவுமில்லை. இது எனது உறவினர்களை மேலும் ஆத்திரமூட்டியது. ஒரு கார் மட்டும் ஏற்பாடு செய்து என்னுடைய மருமகளை அழைத்து வந்தேன். ஹிஜாப் சம்பந்தப்பட்ட சில சிடி-க்களைக் கேட்டு விட்டு என்னுடைய கண்களில் நீர் வழிந்தோடியது. இவ்வளவு நாள் நாம் ஏன் இது போன்ற ஒரு ஹிஜாபைப் பின்பற்றாமல் இருந்து விட்டோம்? என்று வருந்தி அன்றைய தினத்திலிருந்து மார்க்க அடிப்படையில் கணவனுடைய சகோதரனிடம் கூட ஹிஜாபைப் பேண ஆரம்பித்து விட்டோம்.

பேட்டியாளர் : குர்ஆன் ஹதீஸின் பக்கம் உங்களை ஈர்த்தது எது?

முஹம்மது அனஸ் : அஹ்லே ஹதீஸின் வலை தளமான www.ahlehadees.com-ம் ஷைஹ் அதாவுல்லாஹ் தர்வி, ஷைஹ் ஷஃபியுர்ரஹ்மான் முபாரக்புரி, ஷைஹ் மிஃராஜ் ரப்பானி, ஷைஹ் பதீவுத்தீன் ராஷிதி ஆகியோர் ஆற்றிய ஒலி நாடாக்களைக் கேட்டதும் தான் என்னை இந்தக் கருத்தின் பால் அழைத்து வந்தது. (அஷ்ரஃப் அலீ தானவி எழுதிய, தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களின் வெளியீடான) ‘அஃமாலே குர்ஆனி’ என்ற நூலில் உள்ள ஒரு செய்தியைப் பற்றி ஷைஹ் மிஃராஜ் ரப்பானி அவர்கள் ஆற்றிய ஓர் உரையைக் கேட்டேன். அதில் அவர் குறிப்பிட்ட அந்தச் செய்தியை* அஃமாலே குர்ஆனி நூலில் பார்த்து விட்டு மிகவும் வெட்கப் பட்டேன். வேதனைப் பட்டேன். அந்த நூலை விற்கக் கூடாது என்று என்னுடைய பதிப்பக ஊழியர்களுக்குக் கட்டளையிட்டு விட்டேன். இது போன்று ஷிர்க்கான கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை விற்பதையும் நான் நிறுத்தி விட்டேன்.
அஃமாலே குர்ஆனி என்ற நூலில் இடம் பெற்றுள்ளதாக முஹம்மது அனஸ் அவர்கள் குறிப்பிடும் செய்தி இது தான்.
“ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு காலத்தில் உதிரப் போக்கு அதிகமாக ஏற்படுமானால் சூரத்து ஆலஇம்ரானின் 114வது வசனத்தை மூன்று துண்டுத் தாள்களில் எழுதி ஒன்றை வலது தொடையிலும், மற்றொன்றை இடது தொடையிலும், இன்னொன்றை தொப்புளுக்குக் கீழும் கட்டித் தொங்க விட்டுக் கொள்ள வேண்டும்”

பேட்டியாளர் : அஹ்லெ ஹதீசுக்கு வந்த பிறகு நீங்கள் ஏதேனும் சோதனைகளை எதிர்கொள்கின்றீர்களா?

முஹம்மது அனஸ் : நாம் பல்வேறு சிந்தனைகளை உடைய மக்களுடன் வாழ்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் நான் குர்ஆன் ஹதீசுக்கு ஒத்தமைந்த நூல்களை என் புத்தக நிலையத்தில் வைக்க ஆரம்பித்தேன். தங்கள் சிந்தனைக்கு மாற்றமான நூல்கள் என்றோ அல்லது ஸலஃபீ நூற்கள் என்றோ தெரிந்தால் போதும், மக்கள் அதைச் சீண்டுவது கிடையாது. அல்லாமா பின் பாஸ் மையம் என்று டெல்லியில் உள்ளது. அங்கிருந்து நான் நூல்களைத் தருவித்தேன். ஆனால் அவற்றை யாரும் வாங்குவது கிடையாது. காரணம், அந்நூல்களின் ஆசிரியர் லுக்மான் ஸலஃபீ என்பதால் தான். அது தான் நான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் ஆகும்.

பேட்டியாளர் : நீங்கள் மட்டும் தான் குர்ஆன் ஹதீஸ் படி நடக்க ஆரம்பித்துள்ளீர்களா? அல்லது உங்கள் குடும்பம் முழுவதுமா?

முஹம்மது அனஸ் : அல்ஹம்துலில்லாஹ். எனது மனைவி, குழந்தைகள் அனைவரும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலேயே தொழுகின்றனர். நாங்கள் ஏற்கனவே கைலானி என்பவர் எழுதிய தொழுகை நூலைப் படித்து முடித்திருக்கின்றோம். இது போல் புத்தகங்களைப் படிப்பதற்காக அன்றாடம் கால் மணி நேர அமர்வை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

பேட்டியாளர் : தங்களுடைய மகளார் (கணவர் வீட்டில்) பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பதாக (மற்றொரு பேட்டியில்) தெரிவித்திருந்தீர்கள். உங்களுடைய மகளார் ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையா? அல்லது வேறு பிரச்சனையா?

முஹம்மது அனஸ் : கைகளை உயர்த்துவதைத் தவிர்த்து வேறு என்ன விவகாரம் இருக்க முடியும்? விவகாரமே இது தான். தொழுகையில் இரு கைகளையும் உயர்த்துவது நபிவழி தான் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டியும் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. கைகளை உயர்த்துவது தான் நபிவழி என்று மவ்லானா அப்துல் ஹை லக்னவி, இமாம் முஹம்மது ஆகியோர் தங்கள் நூல்களில் தெளிவாக நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். அவற்றை நான் போட்டோ காப்பி எடுத்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வீண் பிடிவாதத்திலிருந்து விலகுவதாக இல்லை.

பேட்டியாளர் : ஷிர்க், பித்அத் போன்ற பாதைகளை விட்டு விட்டு வெளியே வந்து குர்ஆன் ஹதீஸ் என்ற நேரிய வழியைப் பின்பற்றும் உங்கள் மனநிலை எப்படி உள்ளது? நீங்கள் மன திருப்தியுடன் உள்ளீர்களா?

முஹம்மது அனஸ் : நிச்சயமாக! நான் முழு திருப்தியுடன் உள்ளேன். எந்த அளவுக்கெனில், இப்போது நான் இறந்து விட்டால் கூட அல்லாஹ் தன் கருணையால் என்னை ஆரத் தழுவிக் கொள்வான் என்ற முழு நம்பிக்கையில் இருக்கின்றேன். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதற்காக எடுக்கும் எந்த ஒரு சிறு முயற்சியும் அல்லாஹ்வினால் ஒப்புக் கொள்ளப்படும் என்று நம்புகின்றேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! பளிச்சிடும் பளிங்குக் கண்ணாடி போன்ற தூய்மையான மன நிறைவை நான் பெற்றிருக்கின்றேன்.

பேட்டியாளர் : உங்களுடைய வியாபாரமே புத்தகம் தான். உங்களது இந்த மாற்றம் உங்களது வியாபாரத் தொடர்புகளையும், வருமானத்தையும் பாதிக்கச் செய்திருக்கின்றதா?

முஹம்மது அனஸ் : நிச்சயமாக! ஃபழாயிலே ஸதகாத் (தர்மங்களின் சிறப்புகள்), ஃபழாயிலே ஹஜ் (ஹஜ்ஜின் சிறப்புகள்) என்ற தலைப்பில் உள்ள நூல்களை நான் உருது, ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய நான்கு மொழிகளிலும் அச்சிட்டு விற்பனை செய்தேன். இவை பெருமளவு விற்பனையாயின. உருதுப் பதிப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்குள் 5000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இப்போது இவற்றை அச்சிடாதது என்னைப் பெருமளவு பாதித்துள்ளது. எனினும் அல்லாஹ் என்னைக் காப்பானாக! நான் பட்டினி கிடக்கும் ஒரு கட்டம் வந்தாலும் சரி தான். அந்த நிலையை நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்வேன். காரணம் ஒவ்வொருவரும் கண் மூடிய பின் அல்லாஹ்விடம் கணக்கு கொடுத்தே ஆக வேண்டும்.

பேட்டியாளர் : நீங்கள் இது வரை விற்றுக் கொண்டிருந்த அமல்களின் சிறப்புகள் என்ற இந்த நூல்கள் (தர்மத்தின் சிறப்புகள், ஹஜ்ஜின் சிறப்புகள் ஆகியவை இந்நூலின் பாகங்கள் தான்) பல ஷிர்க்கான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்பதைத் தாங்கள் தெரிந்திருப்பீர்கள். "ஒரு பெரியார் மறைவான ஞானத்தை அறிகின்றார்'', "(நபி - ஸல் அவர்கள் இறந்த பின்னர்) வானத்தி-ருந்து இறங்கினார்கள்'', "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கை கப்ரி-ருந்து வெளியே வந்தது'', "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்ன போது அவர்கள் கூறிய பதிலை நாங்கள் செவியுற்றோம்'' என்று தப்லீக் தலைவர்கள் கூறுகின்ற பிதற்றல்கள் இன்னும் இது போன்ற அப்பட்டமான ஷிர்க்கான கருத்துக்கள் இந்நூற்களில் பொதிந்து கிடக்கின்றன என்று தெரிந்த பிறகு இந்நூல்களைப் பல மொழிகளில் விற்கப் போகின்றீர்களா?

முஹம்மது அனஸ் : விற்கப் போவதில்லை. இந்தப் புத்தகங்களை விற்பனை செய்ததையே பாவம் என்று நினைக்கின்றேன். அதனால் வேறெதையும் விற்றாலும் விற்பேனே தவிர இது போன்றவற்றை ஒரு போதும் விற்க மாட்டேன். இந்தப் புத்தகங்கள் அனைத்திற்கும் நானே ஏகபோக உரிமையாளராக இருந்திருந்தால் அன்றே நான் கட-ல் தூக்கி எறிந்திருப்பேன். ஆனால் அதே சமயம் மிக மிக அதிகமான வழிகேடான கருத்துக்களைக் கொண்டுள்ள ஃபழாயிலே அஃமா-ன் இரண்டாம் பாகமான ஃபழாயில் ஸதகா மற்றும் ஹஜ் என்ற நூல்களை நாங்கள் நிறுத்தி விட்டோம். ஃபழாயில் அஃமால் (முதல் பாகத்தையும்) இப்போது இன்ஷா அல்லாஹ் நிறுத்தி விடுவோம்.

பேட்டியாளர் : எவ்வளவு காலமாக ஃபழாயில் அஃமாலை நீங்கள் அச்சிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்தப் பணியைத் துவக்கியது உங்கள் தந்தையார் தானே!

முஹம்மது அனஸ் : என்னுடைய தந்தையார் தான் இதை ஆப்செட்டில் முதன் முதலில் அச்சிட்டார். (இவர்கள் 50 ஆண்டு காலமாக இவற்றை அச்சிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்) துவக்கத்தில் இவை ஹிக்காயத்-இ-ஸஹாபா, ஃபழாயில்-இ-நமாஸ் (தொழுகையின் சிறப்புகள்) என்று தனித்தனி நூல்களாக அச்சிடப்பட்டன. பின்னர் இவை அனைத்தும் ஒரே வால்யூமாக ஆக்கப்பட்டது. ஜக்கரியா மவ்லானாவின் "தப்லீக் - இ - நிஸாப்' என்று எனது தந்தையாரால் தான் இப்படி ஒரு பெயர் கொடுக்கப்பட்டது. ஜக்கரியா மவ்லானா அவர்கள் இப்படியொரு பெயரைக் கொடுக்கவில்லை. தப்லீக் - இ - நிஸாப் என்று இவ்வாறு பெயர் கொடுத்ததற்கு பரேலவிகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததும் இதற்கு அமல்களின் சிறப்புகள் என்று பெயரிடப்பட்டது.

பேட்டியாளர் : இன்னும் இந்தப் புத்தகத்தை அச்சடித்து விநியோகித்து, விற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு இறுதியாக நீங்கள் என்ன அறிவுரை வழங்க விரும்புகின்றீர்கள்?

முஹம்மது அனஸ் : கொள்கையைப் பாழாக்கும் இத்ததைகய புத்தகங்களை விற்று பரப்புவதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஹலாலான ஒன்றல்ல! ஆதாரப்பூர்வமான புத்தகங்கள் நிறைய இருக்கும் போது, புறா சரித்திரங்கள், பச்சைக்கிளி சரித்திரங்களைக் கொண்ட புத்தகங்களை ஏன் விற்க வேண்டும்? (சூஃபிகள் சொன்ன பொய்யான கதைப் புத்தகங்களைக் குறிப்பிடுகின்றார்) இதுபோன்ற புத்தகங்களை விற்பதை விட்டு விட்டு ஆதாரப்பூர்வமான நூல்கள் விற்கப்பட வேண்டும்.

பேட்டியாளர் : உங்கள் இரு சகோதரர்கள் இந்த நபிவழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனரா?

முஹம்மது அனஸ் : ஆம்! நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் என்னுடைய இளைய சகோதரர் சி.டி.க்களைக் கேட்டு விட்டு தொழுகையில் தக்பீரின் போது இரு கைகளையும் உயர்த்துகின்றார். "தொழுகையில் கைகளை உயர்த்துவது உண்மை என்றிருக்கும் போது நாம் ஏன் அதைப் பின்பற்றுவதற்குப் பயப்பட வேண்டும்? இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நிரூபிக்கப் பட்ட செயலும் நபிவழியும் அல்லவா? அதை நபி (ஸல்) அவர்கள் மரணமாகும் வரை கடைப்பிடித்திருக்கின்றார்கள் அல்லவா? எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த சத்திய நெறியில் இருந்த காரணத்தால் நான் தொழுகையில் கையை உயர்த்த ஆரம்பித்து விட்டேன்'' என்று என்னிடம் என் சகோதரர் கூறினார்.

பேட்டியாளர் : சத்தியத்தைத் தேடும் பணியில் தப்லீக் ஜமாஅத்தினரையும் அரவணைத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

முஹம்மது அனஸ் : குர்ஆன் ஹதீஸ் போதனையைத் தேடுவதும், தங்கள் செயல்கள் குர்ஆன் ஹதீசுக்கு இசைவாக உள்ளனவா? என்று சிந்தித்துப் பார்ப்பதும் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். இது தான் எல்லோருக்கும் தெரிவிக்கும் பொதுவான செய்தியாகும்.

பேட்டியாளர் : அஷ்ரப் அலீ தானவியின் "அஃமாலே குர்ஆன்' போன்ற நூல்களைத் திரட்டி பரப்புகின்ற தேவ்பந்தி ஆலிம்களுக்கு எதையேனும் கூற விரும்புகின்றீர்களா?

முஹம்மது அனஸ் : ஆம்! மவ்லானா அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் அஃமாலே குர்ஆனின் ஆசிரியர் ஆவார். எனினும் யாரோ எழுதிய நூலை அஷ்ரப் அலீ தானவீ எழுதியதாக, பின்னால் சொல்லப் படுகின்றதா? அல்லது உண்மையில் அஷ்ரப் அலீ தானவீ அவர்களே இதை எழுதினார்களா? என்று உறுதியாகத் தெரியவில்லை. அல்லாஹ்வே உண்மையை அறிவான். ஆனால் நான் அந்த நூலில் கண்ட கருத்துக்கள் குர்ஆன் ஹதீசுக்கு நேர் முரணானவையாகும். அதனால் அவற்றை விற்பதை நிறுத்தி விட்டேன்.

பேட்டியாளர் : உறுதியாக முன்னால் இது யாரோ ஒருவரால் எழுதப்பட்டு பிந்திய காலத்தில் இது அஷ்ரப் அலீ தானவீயால் எழுதப்பட்டது என்று சொல்ல முடியாது. அப்படி அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் எழுதாததை அவர்கள் எழுதினார்கள் என்று தப்பாக சொல்லப்பட்டிருக்குமானால் அப்போதே தேவ்பந்தி உலமாக்கள் மறுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அஷ்ரப் அலீ தானவீ தான் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டல்லவா வருகின்றார்கள்? எனவே இது நிச்சயமாக அஷ்ரப் அலீ தானவீ எழுதியது தான் என்பது ஊர்ஜிதமாகின்றது.

முஹம்மது அனஸ் : ஜக்கரியா மவ்லானா எழுதிய "ஹிகாயத் அவ்லியா' (வலிமார்கள் வரலாறு) என்ற நூலை நான் படித்த போது பெரிய அதிர்ச்சிக்குள்ளானேன். (பல்வேறு கப்ஸாக்களை உள்ளடக்கிய) இந்நூலுக்கு அஃபாஹே ஸலாஸா என்ற பெயர் வேறு உள்ளது. மொத்தத்தில் 60-70 வகையான புத்தகங்களை அச்சடித்து விற்பனை செய்வதை நிறுத்தி விட்டேன்

பேட்டியாளர் : ஜக்கரியா மவ்லானா எழுதிய ஜிஷ்தியா தரீக்கா வரலாற்றை படித்திருக்கின்றீர்களா?

முஹம்மது அனஸ் : நான் அந்த புத்தகத்திற்காக வந்த ஆர்டர்களையும் நிறுத்தி விட்டேன். அல்லாமல் இதுபோன்ற புத்தகங்களில் வரும் தவறான கருத்துக்களைத் தெளிவு படுத்துகின்ற (விமர்சன) நூல் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கு யாரேனும் இம்மாதிரியான குறிப்புகளைத் தெரிவித்தால் நான் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து தவறாக இருந்தால் அதை நீக்கி விடுவேன்.

பேட்டியாளர் : இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்கள் தேவ்பந்தி உலமாக்கள் மற்றும் பரேலவிகள் ஆவர். அவர்களது கண்மூடித்தனமான பின்பற்றுதல் அவர்களை குர்ஆன் ஹதீஸ் பக்கம் திரும்புவதை விட்டும் தடுக்கின்றது. ஏன்? அவர்கள் சத்தியத்தைத் தெரிந்த பின்னரும் அதை மக்களிடம் எடுத்துரைக்க மறுக்கின்றார்கள். இவர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?

முஹம்மது அனஸ் : மார்க்கம் நமக்கு நபித்தோழர்கள் மூலம் வந்தது. யாரேனும் அவர்களது வாழ்க்கை வரலாறு நூல்களைத் தேடினால் அவை அவருக்குக் கிடைக்காது. ஆனால் நூறு வருடங்களுக்கு முன்னால் மரணித்த பீர்மார்களின் வாழ்க்கை வரலாறுகளை அவர்களின் முரீதுகள் எழுதித் தள்ளுகின்றனர். இன்றளவும் நாம் சஹாபாக்களைப் பற்றி நாம் தெரிந்திருக்கவில்லை.
(இதை அனஸ் அவர்கள் இங்கு குறிப்பிடக் காரணம், அஷ்ரப் அலீ தானவீக்குரிய வரலாறு நூல்கள் அதிகம் உள்ளன. அவை பத்து பாகங்களாக வெளிவந்துள்ளன.)

பேட்டியாளர் : ஒரு பெரிய நூல் வெளியீட்டாளர் என்ற அடிப்படையில் சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

முஹம்மது அனஸ் : உங்கள் செயல்பாடுகளை ஆய்வு செய்யுங்கள். அவை குர்ஆன் ஹதீசுக்கு ஒத்து இருக்கின்றனவா? என்று பாருங்கள். தன்னிடத்தில் மக்கள் சொல்வதையெல்லாம் ஒருவர் பின்பற்றக் கூடாது. இது தான் முதன் முதலில் விடுக்கும் செய்தியாகும். இன்று நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவை ஆதாரங்களைக் குறிப்பிடுவது கிடையாது. எனவே ஒருவர் ஆய்வு செய்ய வேண்டும். தனது செயல்கள் சரியா? தவறா? என்று (குர்ஆன் ஹதீஸ் மூலம்) உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
(பேட்டி இத்துடன் நிறைவடைகின்றது)

                                                                       நன்றி இணையம் safwanlanka.tk

Read more »

Wednesday, September 07, 2011

தரீகா வாதிகளினால் தரங்கெட்டுப் போகும் இலங்கை வானொலி முஸ்லீம் சேவை.


அன்பின் சகோதரர்களே! இலங்கை வானொலி முஸ்லீம் சேவை பற்றியும், அதன் தற்போதைய நிலை பற்றியும் இலங்கை வானொலி முஸ்லீம் சேவையும்ஏகத்துவ எதிர்ப்புப் பிரச்சாரமும்என்ற தலைப்பில் ஒரு ஆக்கத்தை ஏற்கனவே நமது தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

அதனுடைய தொடராக இந்த ஆக்கமும் வெளியிடப்படுகிறது.

இலங்கை அரசின் மூலம் அனைத்து மக்களுக்கும் பயன்படும் விதத்தில் முஸ்லீம்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரச ஊடகம் தான் இலங்கை வானொலி முஸ்லீம் சேவை.

கடந்த பல வருடங்களாக இஸ்லாமிய நிகழ்ச்சிகளை வெளியிடுவதாக சொல்லிக் கொள்ளும் இந்த ஊடகத்தில் ஏகத்துவக் கருத்துக்களை பரப்புவதற்க இடமளிக்கப்படுவது மிகமிகக் குறைவான ஒன்றாகும்.

குர்ஆன், சுன்னா அடிப்படையிலான இஸ்லாத்தின் உண்மைத் தகவல்களை பரப்புவதற்கு இங்கு முழுமையான ஒத்துழைப்போ அல்லது அனுமதியோ தரப்படுவது கிடையாது. இதற்கு சில காரணங்களும் காணக்கிடைக்கிறது. இந்த ஊடகத்தின் முக்கிய பொருப்புக்களில் அமர்த்தப்பட்டிருப்பவர்கள் இஸ்லாத்தின் தூய்மையைக் கெடுத்து குட்டிச் சுவராக்கி வரலாற்றில் சில கருப்புப் பக்கங்களை உருவாக்கிய தரீக்கா ஆதரவாளர்கள் தாம்.

இலங்கையில் எப்பகுதியில் தரீக்காவாதிகளின் நிகழ்ச்சிகள் நடந்தாலும் அது நேரடி அஞ்சல் செய்யப்படுகிறது. இதே நேரத்தில் ஏகத்துவக் கருத்துக்களை பேசுவதற்கு பணம் செலவு செய்து, நிகழ்ச்சிகளை நடத்த நினைத்தால் கூட நம்மால் நடத்த முடிவதில்லை. அதற்கு அனுமதி கிடைப்பதில்லை.


இஸ்லாத்தின் உண்மைக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்படக் கூடாது என்பதிலும் அப்படிப் பரப்பப்பட்டால் அது தங்கள் வருமானத்தைக் கெடுத்துவிடும் என்பதிலும் தரீக்காவாதிகள் மிகவும் குறியாக இருக்கிறார்கள்.

ஏகத்துவம் பேசுவதாகக் கூறும் சில இயக்கங்கள் இச்சேவையில் சில நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்குத் அதன் தரமும் நிலையும் நன்றாகத் தெரியும்.

பொதுவான தலைப்புக்களையும், வேற்றுமையில் ஒன்றுமை போன்ற ஒரு தோற்றத்தையும் தான் அவர்களால் தருவதற்கு முடிகிறதோ தவிர உண்மையான சத்தியக் கொள்கைளை மக்கள் மத்தியில் சொல்வதற்கோ அல்லது அசத்தியத்தை உடைத்து நொறுக்குவதற்கோ முடிவதில்லை.

காரணம் அப்படிச் செய்தால் அவர்களுக்கு அந்த இடம் கிடைக்காமல் போய்விடும். இடத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பொதுவான தலைப்புக்களோடு நின்று கொள்ளவேண்டும்.

பித்அத்களை எதிர்த்துப் பேச முடியாது.

இணைவைத்தலை கண்டித்து கருத்துச் சொல்ல முடியாது.

மார்க்க விரோத செயல்களை அடித்து பேச முடியாது.

சத்தியத்தை உடைத்துச் சொல்ல முடியாது.

இப்படி பல எதிர்ப்புக்களையும் தாண்டிப் போனாலும் கடைசியில் பொதுவான தலைப்புக்கள் மாத்திரம் தான் மிஞ்சும். அதைத் தான் அவர்களும் செய்கிறார்களே!

சரி பொதுவான தலைப்புக்களில் கூட இருப்பதை இருப்பதைப் போன்று சொல்ல முடியுமா? வலைந்து கொடுத்துத் தான் போகவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினையாகிவிடும்.


இஸ்லாத்தின் தூய்மையைக் கெடுக்கும் விதமாக ஏகத்துவத்தை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கும் தரிக்கா சிந்தனைவாதிகள், ஊடகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மார்க்கத்திற்கு விரோதமாக செயல்படுவதைக் தட்டிக் கேட்பதற்கோ அல்லது அதில் சம உரிமையைப் பெற்றுத் தருவதற்கோ யாரும் முயலாமல் இருப்பது பெரும் கவலைக்குறிய செய்தியாகும்.

சூபித்துவத்தை நிலை நாட்ட அசத்தியத்தை ஓங்கச் செய்யத் துடிக்கும் இந்த அசத்தியக் கூட்டத்தினரை அனைவரும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.


புனித ரமழான் மாதம் தொடங்கியதில் இருந்து இலங்கை வானொலி முஸ்லீம் சேவையின் செயல்பாட்டுகளை தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் அதன் உண்மைத் தன்மையை யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.

முஸ்லீம் சேவையில் இப்தார் விஷேஷ நிகழ்ச்சி என்ற ஒன்றை நடத்துகிறார்கள். இந்நிகழ்ச்சியில் நேரடி அஞ்சல் செய்யப்படும் நிகழ்ச்சிகள் எங்கிருந்து வெளியாகின்றன, உரையாற்றுபவர்கள் யார் என்பதையெல்லாம் கவணித்துப் பாருங்கள். தொன்னூற்று ஒன்பது வீதம் தரீக்கா வணக்கத் தளங்களில் இருந்துதான் அவை அஞ்சல் செய்யப்படுகின்றன.

மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை செய்து வழிகெட்டுப் போய்க் கொண்டிருப்பவர்களை அவ்வழியிலேயே விட்டு நாசப்படுத்தி மறுமையில் நஷ்டவாளிகளாக எழுப்பப்பட வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கமாக இருக்கிறது.

பொய்யையும், கட்டுக் கதைகளையும், கப்சாக்களையும் மாத்திரம் மூலதனமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தரீக்கா வாதிகள் தாம் ஊடகத் துறை மூலமாக வளர்ந்து வருவதாக மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் தசாப்தம் முடிவுக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. சத்தியம் ஜெயிக்கும், உண்மைதான் நிலைக்கும், என்றும் வெற்றி ஏகத்துவத்திற்கு மாத்திரமே!

இலங்கை வானொலி முஸ்லீம் சேவை முழுமையாக ஏகத்துவத்தின் கீழ் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. விரட்டியடிக்கப்பட்ட மக்கா நகரில் உண்மை இஸ்லாம் நுழைந்து புரட்சி உண்டாக்கியதைப் போல் இன்ஷா அல்லாஹ் இங்கும் நுழையும் காலம் நெருங்கிவிட்டதை நாம் உணருவோமாக!

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது.நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் (அல்குர்ஆன்)
நன்றி இணையம்: rasminmisc.blogspot.com

Read more »

பெருநாள் திடல் தொழுகை.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மானிக்கம்பிட்டி (தமன்கடுவை)கிளை சார்பாக பெருநாள் திடல் தொழுகை மிகச் சிறப்பாக நடை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் ஹுஸைன் (மதனி) அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்.

Read more »